ஊராட்சி செயலர்கள் மற்றும் சுகாதார ஊக்குநர்களுக்கு IEC – SBM (G) நோக்கு நிலை செயல்பாடுகள் குறித்து பயிற்சி

செங்கல்பட்டு மாவட்ட   தூய்மை பாரத இயக்கம் ஊரக வளர்ச்சி  பயிற்சிப் பயிலரங்கம் 

லட்சுமி பங்காரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மேல்மருவத்தூர். 

பிப். 21.2024 அன்று செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) பகுதி – II  ஊராட்சி செயலர்கள் மற்றும் சுகாதார ஊக்குனர்களுக்கு ஒரு நாள் சிறப்பு அறிமுக செயல்பாடு பயிற்சிப் பயிலரங்கு நடைபெற்றது. இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் திரு கே. வி. சீனிவாசன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். லட்சுமி பங்காரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் ஆர் எஸ் வெங்கடேசன் அவர்கள் வாழ்த்துரை வழங்கி பேசுகையில் இந்தியாவில் சுகாதாரத்தையும் சித்தாமூர் சுகாதாரத்தையும் முன்மாதிரி கிராமமாக சித்தாமூர் திகழ மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளையும் நகரமயமாகி வரும் கிராமங்களில் கிராமத்தின் முன்னேற்ற அவசியத்தையும்  எடுத்துக் கூறினார். அவரைத் தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்ட உதவி திட்ட அலுவலர் திரு ஜே. பி .எஸ் மணி அவர்கள் முன்னிலை வகித்து பேசுகையில் தூய்மை பாரத இயக்கத்தினுடைய செயல்பாடுகளை குறித்து  பேசினார்.செங்கல்பட்டு தூய்மை பாரத இயக்கம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு ரா. சுரேஷ் அவர்கள் எஸ்.பி.எம் (ஜி) திட்ட செயலாக்கம் மற்றும் தகவல் கல்வித் தொடர்பு எனும் தலைப்பில் பயிற்சி அளித்தார்.

சித்தாமூர் வட்டார ஒருங்கிணைப்பாளர் திரு ஆர் ராஜேஷ் கண்ணன் நன்றி கூறினார்.பயிற்சிக்கான ஏற்பாட்டினை மேல்மருவத்தூர் திரு செந்தில்குமார், ஊராட்சி செயலர்கள் மற்றும் ஊராட்சி பணியாளர்கள் செய்திருந்தனர்.செங்கல்பட்டு மாவட்ட தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) பகுதி -II இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தது இதில் 300க்கும் மேற்பட்ட  செயலர் மற்றும் பயிற்சி ஊக்குனர்கள் பங்கேற்றனர்.