The women cell organised one day work shop “Thozhil seivom thozhi” on 12.08.2023 for all Third year girls students.Earring preparation,Mat making , Aloevera soap preparation have trained by our women cell event co-ordinator. There were 250 girls students benefits in this events.
மேல்மருவத்தூர் லட்சுமி பங்காரு
கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்
பெண்கள் ஒரு நாள் சுயதொழில் பயிற்சி முகாம்
அருள்திரு அம்மா அவர்களின் ஆசியுடனும் திருமதி அம்மா அவர்களின் மேற்பார்வையுடனும் தாளாளர் சக்தி திருமதி அ.ஆஷா அவர்களின் நல்வழிகாட்டுதலுடனும் இயங்கிவரும் மேல்மருவத்தூர் லட்சுமி பங்காரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 12.08. 2023 அன்று தொழில் செய்வோம் தோழி – சுயதொழில் பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமில் மாணவி சிவஷி அனைவரையும் வரவேற்றார். கல்லூரி முதல்வர் முனைவர் ஆர்.எஸ்.வெங்கடேசன் அவர்கள் தலைமைதாங்கி பேசுகையில் பெண்களின் தன்னலமற்ற தியாகத்தையும் வீரத்தையும் வியந்து கொண்டாடும் இ ந் நூற்றாண்டில் பெண்கள் சுயதொழில் கற்றுக்கொள்வதால் வளமிக்க வாழ்வாதாரத்தை அவர்களால் நாட்டிற்கும் வீட்டிற்கும் ஏற்படுத்தமுடியும் எனக்கூறினார். பயிற்சியில் கல்லூரியின் வேதியியல் துறைத்தலைவர் முனைவர் பி.செல்வம் அவர்கள் சோப்பு தயாரிக்கும் பயிற்சியினையும் ஆங்கிலத்துறைப் பேராசிரியர் ஆர். மகாலட்சுமி அவர்கள் பட்டு நூல்கம்மல் தயாரிக்கும் பயிற்சியினையும் கணினி அறிவியல் மற்றும் பயன்பாட்டியல் துறைப் பேராசிரியர் வி விஜியலட்சுமி அவர்கள்
கால்துடைக்கும் தரைவிரிப்பு பயிற்சியினையும் அளித்தனர். இப்பயிற்சியில் 250- இற்கும் மேற்பட்ட மாணவிகளும் 15 –இற்கும் மேற்பட்ட பேரசிரியைகளும் மேலும் பல பெண்பணியாளர்களும் பங்கேற்றனர். அதனைத் தொடர் ந்து நடபெற்ற கல்லூரி மாணவிகளுக்கான சைவநவதானிய சமையல் கலைப்போட்டியில் முதலிடம் வணிகவியல் துறை காயத்திரி சமையற் குழுவும் இரண்டாமிடம் வணிகவியல் துறை பவித்ரா சமையற் குழுவும், நுண்ணுயிரியல் தமிழரசி சமையற் குழுவும் மூன்றாமிடம் வணிகவியல் துறை திவ்ய தர்ஷினி சமையற் குழுவும் கணினி அறிவியல் விஜயலட்சுமி சமையற் குழுவும் பரிசு பெற்றனர். நிறைவாக மாணவி கணிதவியல் துறை ஸ்வாதி நன்றி கூறினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை கல்லூரி பெண்கள் வளமைய உறுப்பினர்களும் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜி .இராதா, வி. விஜயலட்சுமி ஆகியோர் செய்திரு ந்தனர்.