அருள்திரு அம்மா அவர்களின் ஆசியுடனும் திருமதி அம்மா அவர்களின்ஆதரவுடனும் தாளாளர், சக்தி திருமதி அ.ஆஷா அவர்களின் நல்வழிகாட்டுதலுடனும் இயங்கிவரும் மேல்மருவத்தூர், லட்சுமிபங்காரு கலைமற்றும் அறிவியல் கல்லூரியில் சென்னை, இஸ்டார் மேக்ஸ்(e.Staar Max)தொழில் நுட்ப நிறுவனமும் கல்லூரி முதுநிலை வணிகவியல் துறையும்இணைந்து 2022-2023 ஆம் கல்வியாண்டிற்கான ஆட் ஆன் கோர்ஸ் – டேலி பிரைம் 2.0 (TALLY PRIME 2.0) என்னும் ஆறு மாத காலச்சான்றிதழ் வகுப்பினை நடத்தியது. அதில் அறுபத்து ஆறு மாணவ/ மாணவியர் பயின்று தேர்வில் வெற்றி பெற்றனர் . அதற்கான சான்றிதழ்வழங்கும் விழா 22.03.2023 அன்று நடைபெற்றது. விழாவில்வணிகவியல் துறைத்தலைவர் முனைவர் ஏ.சிவானந்தம் வரவேற்றார். கல்லூரி முதல்வர் முனைவர் ஆர்.எஸ்.வெங்கடேசன் அவர்கள்தலைமையுரை ஆற்றி பேசும் போது உலகம் வணிகமயமாக மாறிவரும்சூழலில் மாணவ/மாணவியர் பட்டப்படிப்புடன் டேலி பிரைம் 2.0 போன்றசான்றிதழ் படிப்புகள் கற்க வேண்டியதின் அவசியத்தைப் பற்றிக்கூறினார். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற சென்னை,இஸ்டார் மேக்ஸ் தொழில் நுட்பநிறுவன இயக்குநர் திரு.டி. சுவாமிநாதன் அவர்கள் டேலி பிரைம் 2.0 சான்றிதழ் படிப்பு கற்றவர்களுக்கு பல உள்நாட்டு மற்றும் பன்னாட்டுவேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன என்றும் கல்லூரி இறுதித்தேர்வுமுடித்த பிறகு கல்லூரி வளாகத்தேர்வு மூலம் மாணர்வர்கள் தேர்வு செய்துவேலைவாய்ப்பு வழங்கப்படும்எனக் கூறினார். இவ்விழாவில் தொழில்நுட்படேலி நிறுவன ஒருங்கிணைப்பாளர் பேரா.பத்மபிரியா அவர்களும்இருநூறுக்கும் மேற்பட்ட வணிகவியல்துறை மாணவர்களும்பேராசிரியர்களும் கலந்துகொண்டன்ர். வெற்றிபெற்ற மாணவ/மாணவியர்அனைவருக்கும் சிறப்பு விருந்தினரும் முதல்வரும் சன்றிதழ் வழங்கி வாழ்த்துகூறினர். நிறைவாக பேரா. முனைவர் பி.பழனி நன்றிகூறினார்.இவ்விழாவிற்கான ஏற்பாட்டினை வணிகவியல் துறைப்பேராசிரியர்கள் முனைவர் ஜி.இராஜசேகர்,முனைவர் சி.தங்கமணி மற்றும்ஈ.ஜிவானந்தம் ஆகியோர் செய்திருந்தனர்.