மாவட்ட அளவில் அண்ணா மற்றும் காந்தியடிகள் பிறந்த நாள் போட்டி
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் பரிசு பெற்ற லட்சுமி பங்கரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மணவிகள்
இராஜேஸ்வரி வேதாச்சலம் அரசுக் கல்லூரி , அண்ணா மற்றும் காந்தியடிகள் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்வளர்ச்சி துறை மாவட்ட அளவில் பேச்சுப்போட்டி நடத்தியது. இதில் 12/10/2022 அன்று லட்சுமி பங்காரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி , வேதியியல் துறை முதலாமாண்டு மாணவி செளந்தர்யா கலந்துகொண்டு மூன்றாம் பரிசும் ரூ. 2000 ,வணிகவியல் துறை முதலாமாண்டு மாணவி நிவேதா இரண்டாம் பரிசும் ரூ.3000. பெற்றனர். 15/10/2022 அன்று காந்தியடிகள் பிறந்த நாள் முன்னிட்டு நடைபெற்றப்பேச்சுப் போட்டியில் லட்சுமி பங்காரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நுண்ணுயிரியல் துறை இரண்டாமாண்டு மாணவி ச.சிவஸ்ரீ முதல் பரிசு ரூ.5000 வேதியியல் துறை மாணவி கோ.ஏ. ஜீவிதா இரண்டாம் பரிசு ரூ.3000 பெற்றனர்.வெற்றி பெற்ற மாணவிகளுக்கு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் திரு. ஏ,ஆர்.இரகுநாத் அவர்கள் பரிசுத்தொகையும் பாரட்டுச்சான்றிதழும் வழங்கிச் சிறப்பித்தார். வெற்றிபெற்ற மாணவர்களுக்கு, கல்லூரித்தலைவர் திருமதி லட்சுமி பங்காரு அடிகளார் அவர்களும் கல்லூரியின் தாளாளர் திருமதி ஆ.ஆஷா அவர்களும் முதல்வர் மற்றும் ஆசிரியர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.