Plastic Eradication Rally

An AWARENESS RALLY ON PLASTIC ERADICATION (Garbage Free India) programme organized by the National Service Scheme on 26th September 2023 at 10:00 A.M.

The rally started from Adiparasakthi Polytechnic College arch on Vandavasi Highway and ended at Sothupakkam Bus Stand: the chief guest Mr.S.Elumalai, Inspector of Police, Melmaruvathur, Chengalpattu Dt. Around 250 students and staff participated in this program.

மேல்மருவத்தூர் லட்சுமி பங்காரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி அருள்திரு அம்மா அவர்களின் ஆசியுடனும் திருமதி அம்மா அவர்களின் மேற்பார்வையுடனும் தாளாளர் சக்தி திருமதி ஆஷா அவர்களின் நல் வழிகாட்டுதலுடனும் இயங்கி வரும் மேல்மருவத்தூர் லட்சுமி பங்காரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டம் சார்பாக நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி செப்டம்பர் 26, 2023 அன்று நடத்தப்பட்டது. இதில் மாணவர் ஹரிராம் அனைவரையும் வரவேற்றார். கல்லூரி முதல்வர் முனைவர் ஆர்.எஸ்.வெங்கடேசன் அவர்கள் தலைமையேற்று நெகிழியினால் ஏற்படும் தீமைகளைப்பற்றி கூறினார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மேல்மருவத்தூர் காவல்துறை ஆய்வாளர் திரு.எஸ்.ஏழுமலை அவர்கள் கொடி அசைத்து விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார். இப்பேரணி வந்தவாசி நெடுஞ்சாலையில் ஆதிபராசக்தி தொழில்நுட்ப கல்லூரி வளைவில் தொடங்கி சோத்துப்பாக்கம் பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது. இதில் 250 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கலந்து கொண்டு நெகிழி (பிளாஸ்டிக்) ஒழிப்புணர்வு குறித்த பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டு சென்றனர். நிறைவாக மாணவி காயத்ரி நன்றி கூறினார். இப்பேரணிக்கான ஏற்பாட்டினை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் பேராசிரியர் ஜி.பாபு அவர்களும் கணிதத்துறை பேராசிரியர் ஆர்.குமரேசன் அவர்களும் செய்திருந்தனர்.