Freshers Day Celebrations 2023-24

மேல்மருவத்தூர் லட்சுமி பங்காரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்

முதலாமாண்டு துவக்கவிழா

ஜூன் 22. அன்று அருள்திரு அம்மா அவர்களின் அருளாசியுடனும் திருமதி அம்மா அவர்களின் துணையோடும்

சக்தி திருமதி ஆஷா அவர்களின் நல்வழிகாட்டுதலுடனும் செயல்பட்டு வரும் லட்சுமி பங்காரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2023- 2024 ஆம் கல்வி ஆண்டிற்கான முதலாமாண்டு வகுப்புகளுக்கானத் தொடக்கவிழா நடைபெற்றது. இத்தொடக்க விழாவில் கணிதவியல் துறைத்தலைவர் ஜி.இராதா அனைவரையும் வரவேற்றார்.  இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் ஆர்.எஸ். வெங்கடேசன் அவர்கள் தலைமை தாங்கி  கல்லூரியில் செயல்பட்டு வரும் வேதியியல் துறை, நுண்ணுயிரியல் துறை, கணினி அறிவியல் மற்றும் பயன்பாட்டியல் துறை, மேலும்வணிகவியல் (இளநிலை&முது நிலை)துறைகளில் உலக அளவில் புதிதாக உருவாகிவரும் வேலைவாய்ப்புகள், பட்டப்படிப்புடன்  கற்கவேண்டிய துணை நிலைச்சான்றிதழ்ப் படிப்புகள் இளைஞர்கள் சந்திக்கும் சவால்கள் குறித்தும் இன்றைய இளைஞர்கள் பின்பற்றவேண்டிய சமூக விழிப்புணர்வுகள் குறித்தும் மற்றும் பெற்றோர்களின் கடமைகள் குறித்தும் தெளிவாகப் பேசினார். சமூக விழிப்புணர்வு காணொளி குறும்படங்கள் காட்சிபடுத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து கல்விசார் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிறைவாக ஆங்கிலத்துறைத்தலைவர் ஜி.ஏகாம்பரம் நன்றி கூறினார்.பங்கேற்ற அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பேராசிரியர் எம்.சசிகுமார், முனைவர் ஆ.பூபாலன், முனைவர் ஏ.சிவானந்தம்,முனைவர் பி.செல்வம் மற்றும் முனைவர் ஆர். செந்தில்குமரன் ஆகியோர் செய்திருந்தனர். நிகழ்ச்சியினை முனைவர் அ.சிவக்குமார், நுண்ணுயிரியல் துறை மாணவிகள் சிவஸ்ரீ, தர்ஷிகா ஆகியோர் தொகுத்து வழங்கினர்.