Resource Person I MS.RAJALAKSHMI SUBRAMANIAN
Chairwoman-CII IWN, Tamilnadu
Director, Career Tree HR Solutions
Resource Person II MR.SREEANAND CHANDRAN
Senior Technical Manager
UK&German Portfolio,Kyndryl
Resource Person III MS.DILSHAD AZIM
Senior Learning Partner
Grundfos pumps India pvt.Ltd
Lead,c2c verical, CII IWN-TN
மேல்மருவத்தூர் லட்சுமி பங்காரு
கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்
பெண்களுக்கான சுயமுன்னேற்ற செயலூக்க ஒரு நாள் கருத்தரங்கம்…
அருள்திரு அம்மா அவர்களின் ஆசியுடனும் திருமதி அம்மா அவர்களின் மேற்பார்வையுடனும் தாளாளர் சக்தி திருமதி அ.ஆஷா அவர்களின் நல்வழிகாட்டுதலுடனும் இயங்கிவரும் மேல்மருவத்தூர் லட்சுமி பங்காரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 16.09. 2023 அன்று
இந்திய தொழில்துறை
கூட்டமைப்புடன் இந்திய மகளிர் தொடர்பிணைப்பு மன்றமும் கல்லூரி பெண்கள் வளமையமும் இணைந்து “இலக்கு- மன உறுதித் தன்மை- நலமுடன் வாழுதல்” எனும் தலைப்பில் பெண்களுக்கான ஒரு நாள் கருத்தரங்கி னை நடத்தியது. இந்நிகழ்வில் இரண்டாம் ஆண்டு வேதியியல் துறை மாணவி யு.திவ்யா அனைவரையும் வரவேற்றார்.
கல்லூரி முதல்வர் முனைவர் ஆர்.எஸ்.வெங்கடேசன் அவர்கள் தலைமைதாங்கி பேசுகையில் உலகெங்கும் வாழும் பெண்களின் தன்னம்பிக்கை வீரம் தியாகம் போன்றவற்றை கூறி ஔவையார், ஜான்சி ராணி, அன்னை தெரசா, கல்பனா சாவ்லா போன்றோர்களின் இலக்கு ,மன உறுதி தன்மைகளைக்கூறினார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சி ஐ ஐ- ஐ டபிள்யூ என் தலைவர் மேலும் தமிழ்நாடு கெரியர் எச் ஆர் சொல்யூஷன் இயக்குனர் திருமதி ராஜலட்சுமி சுப்பிரமணியன் அவர்கள் பேசுகையில் பெண்கள் வாழ்வில் வலிமையுடனும் திறமையுடனும் வாழ அறிவு சார்ந்த மன உறுதியும் திறமையும் அவசியம் எனக் கூறினார். அவரைத் தொடர்ந்து பேசிய சிறப்பு விருந்தினர் யூ கே மற்றும் ஜெர்மன் போர்ட் போலியோ முதுநிலை தொழில்நுட்ப மேலாளர் திரு ஸ்ரீ ஆனந்த் சந்திரன் அவர்கள் பெண்கள் மன உறுதியுடன் வாழ ஆங்கில தகவல் தொடர்புடன் கணினி அறிவையும் அவர்கள் கட்டாயம் கற்க வேண்டும் எனக் கூறினார். அவரைத் தொடர்ந்து சிறப்புரை ஆற்றிய சிறப்பு உறுப்பினர் திருமதி தில்சாத் அசிம் கிரவுண்ட் போஸ்ட் பம்ப்ஸ் இந்திய தனியார் நிறுவனத்தின் முதுநிலை கற்றல் பங்குதாரர் அவர்கள் பேசும்போது இன்று பெண்கள் விஞ்ஞானத்திலும் மருத்துவத்திலும் சிறந்து விளங்கக் காரணம் இலக்கும் மன உறுதியுமே அதனை வளர்த்துக் கொள்வது ஒவ்வொரு பெண்ணின் தலையாயக் கடமை என கூறினார். நிறைவாக வேதியியல் துறை இரண்டாம் ஆண்டு மாணவி ஆர். அக்ஷயா நன்றி கூறினார். நிகழ்ச்சியினை கணிதவியல்துறை மாணவிகள் சுவாதி, ராஜலட்சுமி ஆகியோர் தொகுத்து வழங்கினர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை கல்லூரி பெண்கள் வளமையம் செய்திருந்தது.
நிகழ்வில் 300-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் பங்கேற்றனர்.