மேல்மருவத்தூர் லட்சுமி பங்காரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மது ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கம்
அருள்திரு அம்மா அவர்களின் ஆசியுடனும் திருமதி அம்மா அவர்களின் மேற்பார்வையுடனும் தாளாளர் சக்தி திருமதி ஆஷா அவர்களின் நல் வழிகாட்டுதலுடன் இயங்கி வரும் மேல்மருவத்தூர் லட்சுமி பங்காரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டத்தின் சார்பில் மது ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு சங்கமும் அச்சிறுப்பாக்கம் காவல் நிலைய மதுவிலக்கு பிரிவும் இணைந்து 15.11.2023 அன்று மது ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்தியது. இந்நிகழ்ச்சியில் வேதியியல் துறை இரண்டாம் ஆண்டு மாணவி எஸ்.ஐஸ்வர்யா வரவேற்றார் .
கல்லூரி முதல்வர் ஆர்.எஸ்.வெங்கடேசன் அவர்கள் தலைமையேற்று பேசுகையில் மாணவர்கள் மது பழக்கத்திற்கு ஆளாகக் கூடாது என்றும், மது மற்றும் போதை வஸ்துப் பொருள்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகளையும் மேலும் பொதுமக்கள் மற்றும் பெற்றோர்களிடத்திலும் இதை எடுத்துக் கூற வேண்டும் எனக் கூறினார். சிறப்பு விருந்தினராக அச்சிறுப்பாக்கம் காவல் நிலைய மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.பி.லோகேஸ்வரி அவர்கள் பேசுகையில் கஞ்சா, மது போன்ற போதைவஸ்து ப் பொருட்களை பயன்படுத்த வேண்டாம் எனவும் சமூகத்தில் யாரேனும் உபயோகித்தால் என்னுடைய தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரியப்படுத்தலாம் எனக் கூறினார். நிரைவாக நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் பேராசிரியர் கோ.பாபு அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறினார்.
250 – இற்கும் மேற்பட்ட மாணவர்களும் 15 -இற்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியை வேதியியல் துறை இரண்டாம் ஆண்டு மாணவி ஆர்.அக்க்ஷயா தொகுத்து வழங்கினார்.