அருள்திரு அம்மா அவர்களின் ஆசியுடனும் திருமதி அம்மா அவர்களின் மேற்பார்வையுடனும் தாளாளர் சக்தி திருமதி அ.ஆஷா அவர்களின் நல்வழிகாட்டுதலுடனும் இயங்கிவரும் மேல்மருவத்தூர் லட்சுமி பங்காரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 15.2023 அன்று இந்தியத்திரு நாட்டின் 77-ஆவது சுத ந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவில் முதலாமாண்டு கணினி அறிவியல் துறை மாணவி பி. காயத்திரி அனைவரையும் வரவேற்றார். கல்லூரி முதல்வர் முனைவர் ஆர்.எஸ்.வெங்கடேசன் அவர்கள் சுதந்திர தினவிழாவில் தலைமையுரை ஆற்றுகையில் நாடும் வீடும் வலிமையுடன் திகழ இளைஞர்கள் படிப்பறிவுடன் சீரிய நல்லொழுக்க நற்பண்புகளை வளர்த்துக் கொள்ளவேண்டும் எனக்கூறினார். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மேனாள் கார்க்கில் இராணுவவீரர் எம்.ஞானசேகரன் அவர்கள் கொடியை ஏற்றிவைத்து பேசுகையில் பாரதத்திரு நாட்டின் சுதந்திர போராட்டத் தியாகிகளையும் போர்வீரர்களின் தியாகங்களையும் நினைவு கூர்ந்து ஒற்றுமையே உலக அரங்கில் உயர்ந்த வெற்றி அதனை இளைஞர்கள் பின்பற்றி வாழ்ந்தால் கலாம் ஐயா அவர்களின் கனவு நிஜமாகும் எனக்கூறினார். அதனைத் தொடர்ந்து வேதியியல் துறை மாணவி ஜிவிதா, கணினிப் பயன்பாட்டியியல் துறை மாணவி பிரியங்கா ஆகியோர் எனது நாடு எனது சுதந்திரம் எனும் தலைப்பில் பேசினர். ஆருன்யா கவிதை வாசித்தார். மாணவர்களின் சுதந்திர தின சாகச நிகழ்ச்சிகளும் அணிவகுப்புகளும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. 2022 -2023 கல்வியாண்டில் கல்லூரி நிர்வாகம் சிறப்பாகப் பணியாற்றியமைக்காக கணினி அறிவியல் மற்றும் பயன்பாட்டியல் துறைத் தலைவர் பேராசிரியர் மா .சசிகுமார் அவர்களுக்கும் நிர்வாக அலுவலர் திரு வ.எ.ஏழுமலை அவர்களுக்கும் தோட்டக்கலை துணை ஊழியர் திரு இரா. இராதா அவர்களுக்கும் ஊக்கத்தொகையுடன் சிறப்புப் பரிசும் வழங்கிச் சிறப்பித்தது. சுதந்திர தின விழாவை முன்னிட்டு கல்லூரியில் பேச்சு, கவிதை, கட்டுரை, ஓவியப்போட்டிகள் நடைபெற்றன. அதில் வெற்றி பெற்ற கோ.ஏ. ஜீவிதா,ச. ஐஸ்வர்யா,பா. மீனாட்சி, வெ. நிகிதா, மு.தமிழ் வேந்தன், பா. வைஷ்ணவி,மு.ரம்யா, தே. சந்தியா எம். சரண்யா, ஆர்.பிரேமா, எஸ். தேவிப்பிரியா ஆகியோருக்கும் முதுநிலை ஸ்நேகா பிரமிட் குழுவினருக்கும் கே.திலகவதி நடனக்குழுவினருக்கும் சிறப்பு விருந்தினர் அவர்களும் கல்லூரி முதல்வர் அவர்களும் சிறப்பு பரிசுகளுடன் சான்றிதழ்கள் வழங்கிச்சிறப்பித்தனர். மாணவி ச.சிவஸ்ரீ, வி.தர்ஷிகா தொகுத்து வழங்கினர். நிறைவாக மாணவி ச. ஐஸ்வர்யா நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாட்டினை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பேராசிரியர் ஜி.பாபு, அ. சிவக்குமார், உடற்கல்வி இயக்குனர் பிரகாஷ் ஆகியோர் செய்திருந்தனர்.
Lakshmi Bangaru Arts and Science College celebrated 77thIndependence Day on August 15, 2023.
Mr.M.Gnanasekaran, a Former, Army Officer who participated as a Special Guest and hosted the National Flag, gave a special address about freedom struggles martyrs, and the sacrifices of the soldiers, and freedom fighters, who also Enlightened Words of Dr.Kalam and remained that Dr.Kalam’s dream would come truth while the youth followed it means.