6 Days Yoga Training

அருள்திரு அம்மா அவர்களின் அருளாசியுடனும் திருமதி அம்மா அவர்களின் நல்வழிகாட்டுதலுடனும் சக்தி திருமதி ஆஷா அவர்களின் துணையோடும் செயல்பட்டு வரும் லட்சுமி பங்காரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 04.09.2023 முதல் 09.09.2023 வரை ஆறு நாள் யோகா -பயிற்சி வகுப்பு நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் ஆர்.எஸ். வெங்கடேசன் அவர்கள் தலைமை தாங்கி யோகா கலையின் சிறப்புகளையும் அதனால் வாழ்வில் ஏற்படும் நன்மைகளைப் பற்றிக் கூறினார். அதன் பிறகு சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மேனாள் உத்ரமேரூர், எம்ஜிஆர் அரசு கலை அறிவியல் கல்லூரி உதவிப்பேராசிரியரும் தற்போதைய காஞ்சிபுர மாவட்ட மனவளக்கலை மன்ற துணைத்தலைவர் முனைவர் ஜி.அருட்செல்வன் அவர்கள் பேசுகையில் யோகா கலை அறிவியல் பூர்வமானது ஆன்மிகத்தேடலின் ஆதாரமானது அக்கலை கற்றுப் பயன்படுத்துவதன் மூலம் வாழ்விலும் சமுதாயத்திலும் பல மாற்றங்களைக் காணலாம் எனக்கூறினார்.பயிற்சியில் இரு நூற்றைம்பது மாணவ/மாணவியர் பங்கேற்றனர்.பயிற்சி பெற்ற அனைவருக்கும் முதல்வர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் சான்றிதழ் வழங்கி வாழ்த்து கூறினர். பயிற்சியில் வணிகவியல்துறை மாணவி எல்.பூஜா வரவேற்றார். மாணவி ஜனணி நன்றி கூறினார்.