Yoga for Youth Empowerment.
Our college with the support of Vethathiri Maharishi Institute for Spiritual and Institutional Education organized 5 days of yoga classes for all First and Second-year students from 23.03.2023 to 28.02.2023.
மேல்மருவத்தூர் லட்சுமி பங்காரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஐந்து நாள் யோகாப் பயிற்சி
அருள்திரு அம்மா அவர்களின் அருளாசியுடனும் திருமதி அம்மா அவர்களின் நல்வழிகாட்டுதலுடனும் சக்தி திருமதி ஆஷா அவர்களின் துணையோடும் செயல்பட்டு வரும் லட்சுமி பங்காரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 23.02.2023 முதல் 28.02.2023 வரை ஐந்து நாள் யோகா -பயிற்சி வகுப்பு நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் ஆர்.எஸ். வெங்கடேசன் அவர்கள் தலைமை தாங்கி யோகா கலையின் சிறப்புகளையும் அதனால் உடல், மனம் அடையும் பல நன்மைகளைப் பற்றிக் கூறினார். பின்னர் சிறப்பு விருந்தினர் காஞ்சிபுரம் மண்டல யோகாகலை துணைத்தலைவர் திரு. கண்ணப்பன் அவர்கள் சிறப்புரை நிகழ்த்துகையில் உலகத்தின் ஆகச் சிறந்த கலைகளில் பழங்காலத்திலிருந்தே மனிதற்கு மிகச்சிறந்தது யோகா கலை எனக்கூறினார்.அவரைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற உத்திரமேரூர்,டாக்டர் எம்ஜிஆர் அரசு கலை அறிவியல் கல்லூரி உதவிப்பேராசிரியர், முனைவர் ஜி.அருட்செல்வன் அவர்கள் பேசுகையில் யோகா கலை கற்று பயன் படுத்துவதன் மூலம் வாழ்விலும் சமுதாயத்திலும் பல மாற்றங்களைக் காணலாம் எனக்கூறினார்.பயிற்சியில் இரு நூற்றைம்பது மாணவ/மாணவியர் பங்கேற்றனர்.பயிற்சி பெற்ற அனைவருக்கும் முதல்வர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் சான்றிதழ் வழங்கி வாழ்த்து கூறினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை கணினித் துறைத்தலைவர் பேரா. எம். சசிகுமார் மற்றும் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ஆ. பூபாலன் ஆகியோர் செய்தனர். நிகழ்ச்சி யில் உதவிப் பேராசிரியர் அ. சிவகுமார் தொகுத்தளித்தார். பயிற்சியில் நுண்ணுயிரியல் இரண்டாமாண்டு மாணவி ச. சிவஷி வரவேற்றார். மாணவி ப. ரோஜா நன்றி கூறினார்.