அறிவியல் கண்காட்சியகம் -2024 லட்சுமி பங்காரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மேல்மருவத்தூர்.
தெய்வத்திரு அம்மா அவர்களின் ஆசியுடனும் திருமதி அம்மா அவர்களின் மேற்பார்வையிலும் சக்தி திருமதி ஆஷா அம்மையார் அவர்களின் நல்வழி காட்டுதலுடனும் இயங்கிக் கொண்டிருக்கும் மேல்மருவத்தூர் லட்சுமி பங்காரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மூன்று நாட்கள் அறிவியல் கண்காட்சியகம்(Science Expo-2024) 31.01.2024 முதல் 02.02 2024 வரை நடைபெற்றது. இக்கண்காட்சியகத்தில் செங்கல்பட்டு விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களிலிருந்து 35 -க்கும் மேற்பட்ட பள்ளி களைச் சேர்ந்த சுமார் 3500 மாணவ/ மாணவியர்கள் கண்டுகளித்தனர். முதல் நாள் கண்காட்சி யில் விழுப்புரம் திருவண்ணாமலை மாவட்டப் பள்ளி மாணவ/ மாணவியர்கள் வருகை தந்திருந்தனர். லட்சுமி பங்காரு கலை அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் ஆர்.எஸ். வெங்கடேசன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன முதல்வர் டாக்டர்.கண்ணன் அவர்கள் பங்கேற்று வாழ்த்துரை வழங்குகையில் மாணவர்கள் எதிர்மறை சிந்தனைகளையும் நேர்மறை சிந்தனைகளையும் கையாளும் முறையை வளர்த்துக் கொள்ள வேண்டும் எனக் கூறினார். அவரைத் தொடர்ந்து இரண்டாவதாக பேசிய சோத்துப்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தமது வாழ்த்துறையில் இன்றைய வலைதளம் மிக்க சூழலில் மாணவர்கள் ஆன்மிகத்துடன் கூடிய கல்வியை கற்க முன்வர வேண்டும் அதுவே சிறந்தது என கூறினார். இரண்டாம் நாள் நிகழ்வில் விழுப்புரம் செங்கல்பட்டு பள்ளி மாணவ/ மாணவியர் வருகை தந்திருந்தனர். கல்லூரியின் கணிதவியல் துறை தலைவர் பேராசிரியை ஜி. ராதா அவர்கள் அனைவரையும் வரவேற்றார். இதில் சிறப்பு உறுப்பினராக பங்கேற்ற மதுராந்தக மாவட்ட கல்வி அலுவலர் திரு .ஐயா சாமி அவர்கள் தமது வாழ்த்துறையில் மாணவர்கள் கனவு காண்பதிலும் கல்வி பயில்வதிலும் சமூகத்திற்கு பயன்படுவதிலும் இந்திய திருநாட்டின் அறிவியல் மேதை அப்துல் கலாம் அவர்களின் கொள்கையை பின்பற்ற வேண்டும் எனக் கூறினார். அடுத்ததாக வாழ்த்துறை வழங்கிய மதுராந்தக மாவட்ட கண்காணிப்பாளர் திரு. மணிமாறன் அவர்கள் மாணவர்கள் இன்றைய நவீன உலகில் கல்வி கற்பதிலும் எதிர்கால வாழ்வை அமைப்பதிலும் அறிவியல் நுட்பங்களை பின்பற்றி வாழ்ந்தால் உயர்ந்த இடத்தை அடையலாம் எனக் கூறினார். மூன்றாம் நாள் நிகழ்வில் திருவண்ணாமலை, செங்கல்பட்டு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ/ மாணவியர்கள் வருகை தந்திருந்தனர். லட்சுமி பங்காரு கலை அறிவியல் கல்லூரி நுண் ணுயிரியல் தலைவர் பேராசிரியர் எஸ். ஆர். பரந்தாமன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். லட்சுமி பங்காரு கலை அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் ஆர் .எஸ். வெங்கடேசன் அவர்கள் சிறப்புரை ஆற்றுகையில் மாணவர்கள் ஒவ்வொருவரும் உயர்ந்த நிலையை அடைய இது போன்ற கண் காட்சியகங்கள் சிறந்த வழிகாட்டும் என்றும் கற்கும் போது பட்டப் படிப்புடன் வேலை வாய்ப்பு கல்வியும் பட்டயச் சான்றிதழ் கல்வியும் கற்கவேண்டும் என்றும் மாணவர்கள் தொழில் முனைவோராக மாற கண்காட்சி யகங்கள் சிறந்த பலனளிக்கும் எனவும் கூறினார். அதனைத் தொடர்ந்து லட்சுமி பங்காரு கலை அறிவியல் கல்லூரி மாணவ/ மாணவியரின் கல்வி சார்ந்த கலை நிகழ்ச்சிகள் வாழ்வியல் சார் கலை நிகழ்ச்சிகள் எனப் பல நடத்தினர். கண்காட்சி யகத்தில் மாணவர்கள் கணினி மற்றும் கணினிப் பயன்பாட்டியலரங்கு, நுண்ணுயிரியல் அரங்கு, வேதியியலரங்கு, தமிழ்/ஆங்கில மொழியியலரங்கு, கணிதவியலரங்கு, நூலகவியலரங்கு,வணிகவியலரங்கு எனப்பல அரங்குகளை அமைத்திருந்தனர்.
வேதியியல் துறை தலைவர் முனைவர் பி. செல்வம் அவர்கள் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி கூறினார். கண்காட்சியகத்தில் மூன்று நாள் நிகழ்ச்சி களில் செங்கல்பட்டு, மதுராந்தகம், வந்தவாசி,
கொடுங்காவலூர், திண்டிவனம், தொழுப்பேடு, மரக்காணம், ஒலக்கூர், அச்சரப்பாக்கம் சோத்துப்பாக்கம் போன்ற பல பள்ளிகளில் சேர்ந்த 100ற்கும் மேற்பட்ட இருபால் ஆசிரியர்களும் பங்கேற்று கண்டுகளித்தனர். இதற்கான ஏற்பாட்டினை கணினி அறிவியல் மற்றும் பயன்பாட்டியல் துறைத் தலைவர் பேராசிரியர் சசிகுமார் அவர்களும் வணிகவியல் துறை தலைவர் முனைவர் சிவானந்தம் அவர்களும் ஆங்கிலத்துறை தலைவர் முனைவர் ஏகாம்பரம் அவர்களும் பேராசிரியர்கள் பலரும் செய்திருந்தனர். முதலாம் ஆண்டு கணினி அறிவியல் துறை மாணவி காயத்ரி , வேதியியல் துறை முதலாம் ஆண்டு மாணவி சங்கரபாண்டியம்மாள் மற்றும் பேராசிரியர் முனைவர் அ. சிவக்குமார் ஆகியோர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினர்.