சமத்துவப் பொங்கல் விழா
தெய்வத்திரு அம்மா அவர்களின் ஆசியுடனும் திருமதி அம்மா அவர்களின் மேற்பார்வையுடனும் தாளாளர் சக்தி திருமதி அ.ஆஷா அவர்களின் நல்வழிகாட்டுதலுடனும் இயங்கிவரும் மேல்மருவத்தூர் லட்சுமி பங்காரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஜன .12.2024 அன்று
சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவில், கல்லூரி முதல்வர் முனைவர் ஆர்.எஸ். வெங்கடேசன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். தமிழர் அடையாளமான நான்கு நாள் பொங்கல் விழாவினையும் கல்லூரி மாணவ/மாணவியர் மற்றும் ஆசிரியர்களுக்கான பல்வேறு போட்டிகளையும் ஆதிபராசக்தி அறங்காவலர் திருக் குடும்பத்தார் சக்தி திரு.கோ.ப. அன்பழகன் ஆதிபராசக்தி மருத்துவமனை தாளாளர் அவர்களும் எல்.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி தாளாளர் சக்தி திருமதி ஆஷா அவர்களும் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி மருத்துவர் சக்தி திருமதி அ. மதுமலர் அவர்களும் ஆதிபராசக்தி மருத்துவமனை குழந்தைகள் மருத்துவர் சக்தி திரு. பிரசன்னா அவர்களும் பங்கேற்று போட்டிகளைத் துவக்கி வைத்து சிறப்பித்தனர். ஆதிபராசக்தி கல்வியியல் நிறுவன அறங்காவலர் இனிப்புடன் பொங்கல் வாழ்த்துரை வழங்கி பேசுகையில் ஒவ்வொருவரும் செய்யும் தொழிலைச் சிறப்பாக செய்தால் தலைவனாகலாம் எனவும் நேர்மையும் ஒழுக்கமும் கடைப்பிடித்தால் சக்தியின் அருள் பெற்று உழைப்பின் உச்சம் தொடலாம் எனவும் கூறி பண்டைய வேட்டி சட்டை ஆடை அணிந்து மாட்டு வண்டிகளில் மாணவர்களுடன் கல்லூரியை வலம் வந்து பொங்கல் விழாவினை செங்கரும்பு சர்க்கரை பொங்கலுடன் கொண்டாடி அனைவரையும் மகிழ்வித்தார். மாணவிகள் பல்வேறு இனிப்பு பொங்கல் வைத்துக் கொண்டாடினர். அதன் பின்னர் மாணவிகளுக்கானக் கோலப்போட்டியும்
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான கயிறு இழுத்தல் போட்டி, இசை நாற்காலி போட்டி, சிலம்பாட்டம், உறியடித்தல் எனப்பல போட்டிகள் பாரம்பரிய முறைப்படி நடைபெற்றன. இதில் மாணவ/ மாணவியர்கள் மேலும் ஆசிரியர்களுக்காக தனித்தனியே போட்டிகள் நடத்தப்பட்டன. மாணவ/ மாணவியர் பண்பாட்டின் அடையாள ஆடை அணிந்து கலை நிகழ்ச்சிகள் பல நடத்தினர். நிறைவாக பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற அனைவருக்கும் முதல்வர் அவர்கள் பரிசுகள் வழங்கி வாழ்த்துடன் நன்றி கூறினார். அனைவரும் விழாவில் பொங்கல் உணவு உண்டு மகிழ்ந்தனர்.