ஐந்தாம் ஆண்டு ஆண்டு விழா மற்றும் விளையாட்டு தின விழா லட்சுமி பங்காரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மேல்மருவத்தூர்.
ஏப்ரல் 13 .2024 அன்று தெய்வத்திரு அம்மா அவர்களின் ஆசியுடனும் திருமதி அம்மா அவர்களின் மேற்பார்வையுடனும் சக்தி திருமதி ஆஷா அம்மா அவர்களின் நல்வழி காட்டுதலுடனும் இயங்கிக் கொண்டிருக்கும் மேல்மருவத்தூர் லட்சுமி பங்காரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஐந்தாம் ஆண்டு, ஆண்டு விழா மற்றும் விளையாட்டு தின விழா நடைபெற்றது. இதில் முதுநிலை வணிகவியல் துறை தலைவர் முனைவர் அ .சிவானந்தம் அனைவரையும் வரவேற்றார். உடற்கல்வி இயக்குனர் திரு எம் பிரகாஷ் அவர்கள் கல்லூரி விளையாட்டு ஆண்டறிக்கை வாசித்தார். கல்லூரி முதல்வர் முனைவர் ஆர். எஸ். வெங்கடேசன் அவர்கள் ஆண்டறிக்கை மற்றும் தலைமை உரை ஆற்றி பேசும்போது இன்றைய தலைமுறையினர் கற்கும் கல்வியை மூலதனமாகக் கொண்டு முதலீட்டாளர்களாக மாறும் சூழ்நிலையை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்றும் எதிர்மறை சிந்தனைகளை தவிர்த்து நம் முன்னோர்கள் வழியில் நேர்மறையாக வாழக் கற்கும் கல்வியை பயன்படுத்த வேண்டும் என்றும் கூறினார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சென்னை பல்கலைக்கழக ஆட்சி குழு உறுப்பினரும், சென்னை டிஜி வைஷ்ணவா கல்லூரியின் கணினி ஆராய்ச்சி துறை இணைப் பேராசிரியர் முனைவர் டி. வேல்முருகன் அவர்கள் பேசும் போது கிராமத்திற்கும் நகரத்திற்குமான இடைவெளியை கல்வி தீர்மானிக்கவில்லை கற்கும் தரம் மட்டுமே தீர்மானிக்கிறது என்றும் மாணவர்கள் தொடர்ந்து ஒரு நாளைக்கு 4 மணி நேரம் படித்தால்,படிப்பிலும் வாழ்விலும் சாதனையாளர்களாக மாறலாம் எனக் கூறினார. இதனை தொடர்ந்து 2023- 2024 காண கல்வியாண்டில் பல்கலைக்கழக தேர்வுகளில் சாதித்த மாணவ மாணவியர்களுக்கும் கல்லூரி அளவில் நடைபெற்ற கொக்கோ, கபடி, மட்டைப்பந்து, வாலிபால்,டென்னிஸ், செஸ் எனப் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ/ மாணவிகளுக்கும் கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவ/ மாணவிகளுக்கும் ஆசிரியர் பணியில் சிறந்து விளங்கிய ஆசிரியர்களுக்கும் பிற துறைகளில் சிறந்து விளங்கிய ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கும் சிறப்பு விருந்தினர் அவர்களும் முதல்வர் அவர்களும் பரிசுகள் சான்றிதழ்கள் கோப்பைகள் வழங்கி சிறப்பித்தனர். கல்லூரியின் ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையை வணிகவியல் துறை மாணவர்கள் பெற்று மகிழ்ந்தனர். அதனை தொடர்ந்து மாணவ/மாணவியரின் வாழ்வியல் சார் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சுமார், 720க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று இருந்தனர். நிறைவாக கணினி அறிவியல் மற்றும் பயன்பாட்டியல் துறை தலைவர் ம. சசிகுமார் நன்றி கூறினார். கலை நிகழ்ச்சி காண ஏற்பாட்டினை பேராசிரியர் ஜி. ராதா அவர்களும், நூலகர் புவனேஸ்வரி அவர்களும் மாணவி திலகவதி அவர்களும் செய்திருந்தனர். மேலும் மாணவி சங்கரபாண்டி யம்மாள், காயத்ரி, பேராசிரியர் அ. சிவகுமார் ஆகியோர் தொகுத்து வழங்கினர். இவ்விழாவிற்கான ஏற்பாட்டினை பேராசிரியர்களும் மாணவர்களும் செய்திருந்தனர்.நன்றிகூடுதல் விவரம்உத்திரம்