உலகத் தாய்மொழி தினவிழா
லட்சுமிபங்காரு கலைமற்றும் அறிவியல் கல்லூரி
மேல்மருவத்தூர்.
தெய்வத்திரு அம்மா அவர்களின் அருளாசியுடனும் திருமதி அம்மா அவர்களின் நல்வழிகாட்டுதலுடனும் சக்தி திருமதி ஆஷா அம்மையார் அவர்களின் துணையோடும் செயல்பட்டு வரும் லட்சுமி பங்காரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலகத் தாய்மொழி தின விழா 22.02.2024 அன்று கொண்டாடப்பட்டது.
விழா தொடக்கத்தில் மாணவி மா. சங்கர பாண்டியம்மாள் அனைவரையும் வரவேற்றார். கல்லூரி முதல்வர் முனைவர் ஆர்.எஸ். வெங்கடேசன் அவர்கள் தலைமை தாங்கி தாய் மொழி தினம் எதற்காக கொண்டாடப்படுகிறது என்று பாக்கிஸ்தானில் ஏற்பட்ட வங்க மொழி புரட்சி பற்றிக் கூறி நாம் எத்தனை மொழிகள் படித்தாலும் எந்த பணி செய்தாலும் நாம் நம் தாய்மொழியை நேசித்து சுவாசமாக எண்ணி தாய்த் தமிழ் மொழியை படிக்க வேண்டும். தாய்மொழியும் தாய்மையும் இந்த தேசத்திற்கும் தனி மனிதனுக்கும் அவசியம் என்று பேசினார்.
பின்னர் சிறப்பு விருந்தினர் காஞ்சிபுரம் ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ் துறை தலைவர் முனைவர் ஜெ.ராதா கிருஷ்ணன் அவர்கள் தமிழர் மறமும் அறமும் எனும் தலைப்பில் சிறப்புரை நிகழ்த்துகையில் உலகத்தின் ஆகச் சிறந்த தத்துவங்கள் அறிவியல்கள் உட்பட்ட அனைத்தும் தமிழ் இலக்கியங்களில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பதிவு செய்யப்பட்டுள்ளது.
செம்மொழி என்ற தகுதிப்பாட்டிற்கான 16தகுதிகளும் உலகில் தமிழ் மொழிக்கு மட்டும் உள்ளது நம் தாய் மொழியின் சிறப்பாகும் அதற்கு தமிழரின் வீரமும் கொடையும் சான்றாகத் திகழ்கிறது எனப் பேசினார். இறுதியில் மாணவி பா. காயத்ரி நன்றி கூறினார்.
இதில் இருபத்தைந்திற்கும் மேற்பட்ட இருபால்பேராசிரியர்களும் சுமார் முந்நூறுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்துகொண்டனர்..
இந் நிகழ்விற்கான ஏற்பாட்டினை கல்லூரியின் தமிழ்த்துறை செய்திருந்தது.