Alumni Cell Organized 2nd Alumni meet for the 2019-21 batch (our first batch) students.
மேல்மருவத்தூர் லட்சுமி பங்காரு
கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்
இரண்டாமாண்டு அலம்னி விழா-2023
அருள்திரு அம்மா அவர்களின் ஆசியுடனும் திருமதி அம்மா அவர்களின் மேற்பார்வையுடனும் தாளாளர் சக்தி திருமதி அ.ஆஷா அவர்களின் நல்வழிகாட்டுதலுடனும் இயங்கிவரும் மேல்மருவத்தூர் லட்சுமி பங்காரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் டிசம்பர் .10.2023 அன்று கல்லூரி (அலம்னி அசோசியேஷன்) மேனாள் மாணவர் சங்கம் சார்பாக இரண்டாம் ஆண்டு முன்னாள் மாணவர்கள் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது.நிகழ்வில் மேனாள் மாணவர் சங்க செயலாளர் முனைவர் ஏ.சிவானந்தம் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். கல்லூரி யில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளுக்கான காணொளி திரையிடப்பட்டது. கணினி அறிவியல், கணினிப் பயன்பாட்டியல், வணிகவியல், கணிதவியல், ஆங்கிலம், தமிழ்த் துறைகளைச் சார்ந்த துறைத் தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் வாழ்த்துரை வழங்கினார். விழாவில் தலைமை தாங்கி தலைமையுரை யாற்றிய கல்லூரி முதல்வர் முனைவர் ஆர்.எஸ் வெங்கடேசன் அவர்கள் மேனாள் மாணவர்கள் உயர்கல்வி கற்பதுடன் வாழ்வை செம்மையாக்கிட பல்வேறு உயர் பதவிக்குச் செல்லவேண்டும் எனவும் பல் வேறுசமூகத் தொண்டாற்றிட முன்வர வேண்டும் எனவும்கூறி, கல்லூரி நினைவுப்பரிசுகள் வழங்கிச் சிறப்பித்தார். கல்லூரி மாணவர்களின் வாழ்வியல் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் பல நடைபெற்றன.
நிறைவாக மேனாள் மாணவர் சங்கப் பொருளாளர் பேராசிரியர் எஸ் .சத்தியகலா அவர்கள் நன்றி கூறினார்.
நிகழ்வில் மேனாள் மாணவர் சங்க தலைவர் சிவப்பிரகாசம் உட்பட 50 – இற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ/மாணவியர்களும் பல பேராசிரியர்களும் பங்கேற்று சிறப்பித்தனர்.