மேல்மருவத்தூர் லட்சுமி பங்காரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ/மாணவியர் புழுதிவாக்கம் அக் ஷியா கலை மற்றும் அறிவியல் கல்லூரி நடத்திய போட்டிகளில் ஒட்டு மொத்த சாம்பியன் கோப்பை மற்றும் 36 பரிசுகள்
பெற்றனர்.
தெய்வத்திரு அம்மா அவர்களின் ஆசியுடனும் திருமதி அம்மா அவர்களின் மேற்பார்வையுடனும் தாளாளர் சக்தி திருமதி அ.ஆஷா அவர்களின் நல்வழிகாட்டுதலுடனும் இயங்கிவரும் மேல்மருவத்தூர் லட்சுமி பங்காரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பில் புழுதி வாக்கம் அக் ஷியா கலை மற்றும் அறிவியல் கல்லூரி DREAM GRO – 24 எனும் தலைப்பில் கல்லூரிகளுக்கு இடையேயான போட்டிகளை 21.03.2024 மற்றும் 22.03.2024 ஆகிய இரு தினங்கள் நடத்தியது. முதல் நாள் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் கவிதை, கட்டுரை,பேச்சுப் போட்டிகள் நடைபெற்றன.இவற்றில் ஒருமுதல் பரிசு , இரண்டு இரண்டாம் பரிசுகள்,மூன்று மூன்றாம் பரிகளை மாணவி ஜீவிதா காயத்ரி பவித்ரா பிரியங்கா போன்றோர் பெற்றனர். இரண்டாம் நாள் கணினி திறனறிவு மற்றும் செயல் அறிவு சார் போட்டிகளான Crack the Code, ppt, project presentation, Best Manager போன்ற போட்டிகளுடன் தனி நபர் பாடல் போட்டி, இசைக்கருவிகள் வாசித்தல், குறும்படம், மைமிங் படக்கவிதை, பல குரல் என பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இதில் ஏழு மாணவர்கள் முதல் பரிசும், ஐந்து மாணவர்கள் இரண்டாம் பரிசும் மூன்றாம் பரிசினை 6 மாணவர்களும் மேலும் பலர் ஊக்க பரிசுகளுமாக மொத்தம் 36 பரிசுகளையும் DREAM GRO -24 எனும் ஒட்டுமொத்த சேம்பியன் கோப்பையையும் லட்சுமி பங்காரு கலை அறிவியல் கல்லூரி மாணவ மாணவியர் பெற்றுவந்தனர்.
ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் மற்றும் பல்வேறு போட்டிகளில் பரிசுகள்பெற்று வந்த மாணவ/ மாணவியர் லட்சுமி பங்காரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தலைவர் திருமதி லட்சுமி அம்மா அவர்களிடம் ஆசிபெற்றனர்.
கல்லூரியின் தாளாளர் சக்தி திருமதி அ. ஆஷா அம்மா அவர்களிடம் வாழ்த்து பெற்றனர். கல்லூரியின் முதல்வர் முனைவர் ஆர்.எஸ். வெங்கடேசன் அவர்கள் அனைத்து மாணவர்களுக்கும் பாராட்டு தெரிவித்தார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை நூலகர் மு. புவனேஸ்வரி அவர்களும் கணினி அறிவியல் மற்றும் பயன்பாட்டியல் துறை பேராசிரியர் எஸ். செல்வராகினி அவர்களும் செய்திருந்தனர்.உறுதி!மோசம்!நன்றி!