Naan Mudhalvan Hr.Sec.School Students Visit

The SCOPE COURSE PROGRAMME was held in Lakshmi Bangaru Arts and Science College, Melmaruvathur through National Service Scheme on 31.10.2023. In this programme 129 students from four schools namely Sothupakkam Government Higher Secondary School, Kayapakkam Government Higher Secondary School, Chunampedu Government Higher Secondary School and Vennangupattu Government Higher Secondary School participated and visited the college. Two teachers accompanied the students from each school.

தமிழக அரசு நான் முதல்வன் திட்டத்தின் கீழ்

பள்ளி மாணவ/ மாணவியர்களுக்கு

கல்வி வளர்ச்சி எழுச்சி முகாம்

லட்சுமி பங்காரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மேல்மருவத்தூர்.

அக். 31.2023 அன்று மேல்மருவத்தூர் லட்சுமி பங்காரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழக அரசின் உயர்- கல்வித்துறை  சார்பாக மாணவர்களுக்கு உயர் கல்வியை மேம்படுத்தும்வகையில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் சோத்துப்பாக்கம், சூனாம்பேடு, கயப்பாக்கம், வெண்ணாங்குபட்டு அரசு மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த பள்ளி மாணவ/ மாணவியர்களுக்கு கல்வி வளர்ச்சி எழுச்சி முகாம் நடைபெற்றது. இதில் கல்லூரி மாணவி பூஜா அனைவரையும் வரவேற்றார். கல்லூரி முதல்வர் முனைவர் ஆர். எஸ். வெங்கடேசன் அவர்கள் தலைமையுரை ஆற்றி பேசுகையில் கலை அறிவியல் கல்வி கற்பதால் அரசுத்துறை,தனியார் துறை, தொழில்துறை, மருத்துவத்துறை, தொழில்நுட்பத் துறைபோன்ற துறைகளில் தாய்நாடு மட்டுமல்லாது அயல்நாட்டிலும் பல்வேறு துறைகளில் காணப்படும் வேலை வாய்ப்புகளை பட்டம் மற்றும் பட்ட மேற்படிப்பு படித்து பெறலாம் எனக்கூறினார்.  அதனைத்தொடர்ந்து  நடந்த சிறப்புரை நிகழ்வில், கணினி அறிவியல் மற்றும் பயன்பாட்டியல் துறை குறித்து உதவி பேராசிரியர் முனைவர் சக்திதரன் அவர்களும், வேதியியல் துறை குறித்து முனைவர் குமரேசன் அவர்களும், நுண்ணுயிரியில் துறை குறித்து முனைவர் ஆர். எஸ். பரந்தாமன் அவர்களும், வணிகவியல் துறை குறித்து முனைவர் ராஜசேகர் அவர்களும் இள நிலைப்பட்டம் ,முதுநிலை பட்டம்,   முனைவர் பட்டம்  மற்றும் வேலை வாய்ப்பு சான்றிதழ்களின் பயன்களைப்பற்றிக் கூறினர். அதன் பின்னர் பள்ளி மாணவ/மாணவியர்  உயர் கல்வி மற்றும், வேலைவாய்ப்பு குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது.  எதிர்கால கல்வி வளர்ச்சி குறித்து, கல்லூரி மாணவ/ மாணவியரின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்வில் 144- பள்ளி மாணவ மாணவிகளும் 15- இற்கும் மேற்பட்ட இருபால்பள்ளி  ஆசிரியர்களும் பங்கேற்றனர். நிறைவாக கல்லூரி நான் முதல்வன் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் தங்கமணி  நன்றி கூறினார்.